வாஜ்பாய் உடல்நிலை: இரவு 9மணிக்கு எய்ம்ஸ் சென்று விசாரித்த பிரதமர் மோடி

டில்லி :

டல் நலமில்லாமல் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும்  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் மருத்துவமனை சென்றார்.

இரவு 9 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை  வந்த பிரதமர் மோடி சுமார் 20 நிமிடங்கள் மருத்துவனையில் இருந்ததாகவும், வாஜ்பாய் உடல்நிலை குறித்து டாக்டர்கள் குழுவிடம் கேட்டறிந்ததாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வரும்   பாரதியஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான  அடல் பிகாரி வாஜ்பாய் திடீர்  உடலக்குறைவு காரணமாக கடந்த 11ந்தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு வழக்கமான பரிசோதனையுடன், டயாலிசிஸ் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை அறிவித்து உள்ளது.

வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பாஜக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்,  வாஜ்பாய் உடல்நிலை குறித்து பாரதியஜனதா கட்சி மூத்த தலைவர்கள் மருத்துவமனை சென்று விசாரித்து வருகிறார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாஜ்பாய் உடல்நிலை குறித்து மருத்துவமனை சென்று விசாரித்து வந்த நிலையில், பிரதமர் மோடியும் எய்ம்ஸ் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற பிரதமர் மோடி, வாஜ்பாய் உடல்நலம் குறித்து மருத்து வர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், சுமார் 20 நிமிடம் மருத்துவமனையில் மோடி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மோடியின் இரவு நேடி திடீர் மருத்துவமனை விஜயம் பாரதியஜனதா நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.