சர்வதேச யோகா தினம்: வரும் 21ம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரை

டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2014ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமராக  மோடி பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் யோகா தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் யோகா பயிற்சிகள் நடைபெறும். ஆண்டுதோறும், யோகா தினத்தன்று பிரதமர் மோடி யோகா தின பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.

இந் நிலையில், சர்வதேச யோகா தினமான ஜூன் 21ம் தேதி நாட்டு மக்களுடன் டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.  யோகாவின் நன்மைகள் குறித்து விளக்கவுள்ளார். மேலும், தற்போது கொரோனாவால் உருவாகியுள்ள சூழ்நிலைகள் குறித்தும் பிரதமர் மோடி தமது உரையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.