கொரோனா தீவிர பரவல் எதிரொலி: நாளை மாநில முதல்வர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை

டெல்லி: நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981லிருந்து 2,109  ஆக அதிகரித்துள்ளது.

இந் நிலையில், நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆலோசனையின் போது மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் நிலை, கொரோனா பாதிப்பு, சுகாதார பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்படுமா? என்பது பற்றியும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கருத்து கேட்பார் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய அரசு வரும் 17ம் தேதி வரை பொது முடக்கத்தை பிறப்பித்திருந்தது.