இந்திய சுய சார்பு  குறித்த புதிய அறிவிப்பை மோடி ஆகஸ்ட் 15 வெளியிடுவார் : ராஜ்நாத்சிங்

டில்லி

கஸ்ட் 15 சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இந்தியாவின் சுயச்சார்பு குறித்த புதிய விவரங்களை வெளியிடுவார் எனப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்திய சுய சார்பு  திட்டத்துக்கு மத்திய அமைச்சகம் மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.   இந்தியாவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்னும் இந்த கொள்கைக்கு இணங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 101 ராணுவ பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங் நினைவு அஞலி நிகழ்வில் ஆனலைன் மூலம் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார்.  அப்போது தனது உரையில் ராஜ்நாத்சிங், “தற்போதைய கொரோனா பரவுதல் மூலம் ஒரு நாடு சுய சார்பின்றி இருந்தால் தனது இறையாண்மையைக் காப்பாற்ற முடியாது என்பது தெளிவாகி உள்ளது.

இந்திய அரசு எப்போதும் தனது சுயமரியாதை மற்றும் இறையாண்மைக்கு கேடு வர அனுமதிக்காது.  இந்தியாவின் சுயசார்பு கொள்கை குறித்த புதிய விவரங்களை பிரதமர் மோடி ஆகஸ்ட்15 ஆம் தேதி டில்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் அறிவிப்பார்,”எனத் தெரிவித்துள்ளார்.

You may have missed