சிங்கப்பூரில் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்த லீ: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்பாகவே தேர்தலை அறிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு இடையில் பாராளுமன்ற தேர்தல் நேற்று  நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முகக்கவசம், கையுறைகள் அணிந்தவாறு மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர்.

தேர்தல் முடிவில் லீயின் ஆளும் கட்சி வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மீண்டும் வெற்றி பெற்ற லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர் தமது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் வெற்றிக்கு பாராட்டுகள். சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தை பெறுவதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.