சென்னை:

ஜெ. பிறந்த நாள் விழாவில் அதிமுக அலுவலகத்தை  பிரதமர் மோடியின் படம்  அலங்கரித்தது.


மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, அவர் மட்டுமே கட்சியில் முன்னிறுத்தப்பட்டார். கட்சியின் ஒரே தலைமையாக அவர் நீடித்து வந்தார். அதேபோல் அதிமுக அலுவலகத்திலும் ஜெயலலிதா படமும், எம்ஜிஆர் படமும் மட்டுமே இருக்கும்.

இந்நிலையில், தற்போது சென்னை அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் கருப்பு மற்றும் வெள்ளையில் இருக்கிறது. சுவற்றின் ஓரத்தில் இன்று காலைதான் இந்த புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது

ஜெயலலிதாவும், மோடியும் இருக்கும் அந்த படத்தில் மோடிக்கு ஜெயலலிதா மனு அளிக்கிறார். ஆளுயர படம் அலுவலக நுழைவாயிலின் ஒருபுறம் வைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு அதிமுக – பாஜக கூட்டணி வைத்துள்ளதை அடுத்து மோடி படம் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.*

*அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம், நரசிம்ம ராவ், வாஜ்பாய் ஆகியோரின் படங்கள் உள்ளன. இந்த நிலையில் புதிதாக மோடியின் படமும் இடம்பெற்றுள்ளது.