டில்லி

பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் கொரோனா குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்..

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த முன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளது. இன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி உள்ளார்.

அவர் தனது உரையில் ” பல இந்தியர்கள்   கொரோனாவால் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்   அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.    இது  மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு.   இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை நாம் கேள்விப்பட்டதும் பார்த்ததும் இல்லை
கொரோனா போன்ற தாக்குதல் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.   நம் மனித இனம் கொரோனா வைரஸ் முன்னதாக தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.  நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் முடியும்

ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலரும் தங்கள் அன்பிற்கு உரியவர்களை இழந்துள்ளனர்.
உலகம் கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.ஒரே ஒரு வைரஸ் உலகத்தில் பெரும்  நாசத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலரும் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்துள்ளனர்
உலகம் கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது    இந்த வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த போது நம்மிடம் PPE kit கள் கிடையாது.    ஆனால் இன்று ஒரு நாளைக்கு  இரண்டு லட்சம் PPE உருவாகுகிறோம்

மனிதர்களுக்குப் பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது கொரோனா  உலகுக்கு இந்தியா நம்பிக்கை ஒளி அளித்துக் கொண்டிருக்கிறது.  பல உலகநாடுகளை விட  இந்தியா  மிக மிக  நன்றாக கொரோனா தடுப்பில் செயல்படுகின்றது.

நாம் யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்” என கொரோனா குறித்துத் தெரிவித்துள்ளார்.