கவுகாத்தி,

டமாநிலங்களில் சமீப காலமாக பெரும் மழை பொழிந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அசாம் மாநிலம் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில் அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் குறித்தும் அறிவிப்பு வெளியிடாமல், தனது மாநிலமான குஜராத்துக்கு 500 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக மோடி அறிவித்திருப்பதற்க, அசாமின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய மோடி தலைமையிலான அரசு, அசாம் மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்யாமல் ஓரவஞ்சனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக 500 கோடியை அறிவித்துள்ள பிரதமர் மோடி, அசாம் மாநிலத்துக்கு ஓரவஞ்சனை செய்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

பெரும் கனமழை காரணமாக குஜராத் கடுமையாக பாதிக்கப்பட்டது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோ விமானம் மூலம் பார்வையிட்டார்.  பின்னர்  குஜராத் மாநில வெள்ள பேரிடர் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடிக்கு மேல் வழங்கப்படும் என்றும், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், குஜராத்தில் கனமழை பெய்வதற்கு முன்பாகவே அசாமில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும்  வெள்ளப்பெருக்கெடுத்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

அசாமில் கன மழை காரணமாக 29 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று வரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஊடகங்கள் இந்த தகவல்களை  இதை புறக்கணிப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மொத்த சேதம் சுமார் 2,939 கோடி ரூபாய் என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.  ஆனால், மத்திய அரசு இதுவரை  அசாம் மாநிலத்துக்கு இடைக்கால வெள்ள நிவாரணம் குறித்தும் அறிவிக்கவில்லை.

இதுகுறித்து பத்திரிகையாளர் புயல் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதில், பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட செய்கிறார்… ஆனால், கடும் பாதிப்புக்குள்ளான அசாமை பார்வையிட, ஜூனியர் மந்திரியான கிரன் ரிஜ்ஜூவை அனுப்புகிறார் என்று கூறியிருந்தார்.

குஜராத்தும், அசாமும்  பாரதியஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள்தான். இவற்றுக்குள் ஏன் இந்த பாகுபாடு என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களை ஆய்வு செய்த, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் வி.எஸ்.சேகர் தலைமையிலான ஏழு உறுப்பினர் மத்திய குழு, அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம்  குறித்து மதிப்பிடுவதற்காக கவுஹாத்திக்கு வந்துள்ளது.

அசாம் புறக்கணிப்படுவது குறித்து, விவசாயிகள் ஆர்வலர் அகில் கோகோய் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அசாமில் கிட்டத்தட்ட 1.32 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். 21 மாவட்டங்களில் 15,700 க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது. இவர்களுக்காக 363 நிவாரண முகாம்களை அரசு ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.

மேலும்,  தற்போது  பல பகுதிகளில் வெள்ளப் பெருக்குகள் குறைந்துவிட்டன. ஆனால் 9 மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் 5 மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் 4,716 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதுமான நிவாரணம் வழங்கப்பட்டதாக மாநில அரசு கூறி வந்தாலும், மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளில் தளர்ச்சியின் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் கூறி உள்ளார்.

அசாமை ஆட்சி செய்து வரும் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியின் அமைச்சர்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை தாமதமாகவே சந்தித்தனர் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், மத்திய அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு மட்டும் வெளியிட்டுவிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமை பார்வையிட ஒரு மூத்த அமைச்ரை கூடஅனுப்பவில்லை என்றும் கூறி உள்ளார்.

அசாமின் வெள்ள சேதம் குறித்து முன்னாள் முதல்வர் தருண்கோகாய்  தனத டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது,

அசாம் வெள்ளத்தால் 76 பேர் உயிரிழந்தனர், பிரதமர் நரேந்திர மோடி  வெள்ள சேதத்தை பார்வையிடவில்லை. அவரது  அரசாங்கமும் போதுமான நிதிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடவில்லை ”

ஆனால், குஜராத்துக்கு 500 கோடி வெள்ள நிவாரண நிதியாக அறிவித்து உள்ளார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மோடியின் அசாம் மாநிலம் மீதான ஓரவஞ்சனை பாரதியஜனதா தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.