டெல்லி:

ஐ.நா.வின் 6 மொழிகள் உள்பட  இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ மான  இணையதளம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஏலம் விடப்பட்டுள்ளது.


டிஜிட்டல் மயத்தை ஊக்குவித்து வரும் பிரதமர் மோடி, தனது அலுவலக இணையதளத்தை பல தரப்பட்ட மக்களும் பார்வையிடும் வகையில் பல மொழிகளில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ மான இணையதளம் 12 மொழிகளில் இயங்கி வருகிறது.
இதை உலக முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பார்வையிடும் வகையில் 6 உலக மொழிகள் உடன் 22 இந்தியா மொழிகளிலும் மாற்றம் செய்ய அறிவுறுத்தி இருந்தார். அதையடுத்து, தேசிய இ-நிர்வாக பிரிவுக்கு  அதற்கான பணிகளை மேற்கொண்டு,  தற்போது  டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இந்த வடிமைப்பிற்கான திட்ட வரைவை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
ஏலத்திற்கு முந்தைய கூட்டம்ஜூலை 31 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான டெண்டரில்,  அதற்கான  நிறுவனம் ஒரு விரிவான மென்பொருள் தேவை, வலைத்தளத்தின் மேம்பாடு, பராமரிப்பிற்காக இறுதி முதல் நிர்வகிக்கப்படும் சேவை உள்பட பல தகவல்கள் கோரப்பட்டு உள்ளது.
மேலும்,  ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ 6 மொழிகளான,  அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய, ஸ்பானிஷ் மொழிகளிலும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளான(22) அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிபூரி, மராட்டி, நேப்பாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளிலும் பிரதமரின் இணைதளத்தை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளது.