விமானப் படை அதிகாரியின் விடுதலைக்குப் பின் பிரதமர் மோடியின் வீரம் உள்ளது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

டெல்லி;

விமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலைக்குப் பின்னால், பிரதமர் மோடியின் வீரம் இருக்கிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

இந்தியாவின் மகனை 48 மணிநேரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வந்த வீரன் (மோடி) ஆர்எஸ்எஸ் காரர் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம். (பாஜகவில் சேரும் முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

விமானப் படை அதிகாரி அபிநந்தனின் விடுதலைக்குப் பின்னால், பிரதமர் மோடியின் வீரம் இருக்கிறது.

சேவை செய்தே ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்தியாவை கட்டி எழுப்பியிருக்கிறது என்றார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: nationwide work of the Rashtriya Swayamsevak Sangh, மோடியின் வீரம், ஸ்மிருதி இராணி
-=-