பிரதமர் மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது: ஐ.நா. அறிவிப்பு

ந்த ஆண்டுக்னான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான  ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’  விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக  ஐ.நா. அறிவித்து உள்ளது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பாக சர்வதேச அளவில் பங்காற்றியவர்களுக்காக சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  ஐ.நா. சபையில் சுற்றுச்சூழல் துறை இதுகுறித்து ஆய்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், 2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான ஐ  ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் மற்றும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மாக்ரான் உள்பட  6 பேர் தேர்வாகி உள்ளனர்.