பிஎம் நரேந்திர மோடி ஏப்ரல் 12ம் தேதி வெளியாகுமா…?

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

கடந்த 10ம் தேதி தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்நிலையில் ஓமங் குமாா் இயக்கத்தில், விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி வரும் பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் பிஎம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.