அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து மரியாதை

டெல்லி,

பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கு இன்று 92-வது பிறந்தநாள். இதையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு நேரில் சென்று  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே.அத்வானி, தனது 92வது பிறந்தநாளை இன்று   கொண்டாடுகிறார்.  பிறந்த நாளையொட்டி அத்வானிக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட  பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அத்வானியுடன் தலைவர்கள் சிறிது நேரம் உரையாடினார்கள்.

அத்வானி பிறந்தநாள் குறித்து, மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், நமது இந்திய மக்களை மேம்படுத்துவதில், அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும். அவரது நிர்வாகத் திறன்கள்  உலக அளவில் பாராட்டப்படுகின்றன என்று கூறி உள்ளார்.