ஐ.நா.வின் ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதை பெற்றார் பிரதமர் மோடி

--

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொண்டதன் காரணமாக பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருதை ஐ.நா. பொதுச் செயலாளர் வழங்கி கவுரவித்தார்.

modi

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டின் உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐ.நா.சபை தேர்வு செய்து உள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், மேலும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை வருவதற்காகவும் இந்த விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கலந்துகொண்டு மோடிக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதினை வழங்கி கவுரவித்தார்.