வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். நாளை வாஜ்பாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அவர் உருவம் பதிந்த நாணையம் வெளியிடப்பட்டது.

100

மறைந்த அடல் பிகர் வாய்பாய் இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்தார். பாஜகவின் மூத்த தலைவராக இருந்த வாஜ்பாயின் பிறந்த நாள் நாட்டின் சிறந்த நிர்வாக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை வாஜ்பாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.

அதனை முன்னிட்டு, இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அத்வானி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட நாணயத்தில் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழே அவரது பெயர் தேவநாகரி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் வாஜ்பாயின் தோற்றம் மற்றும் மறையும் இடம்பெற்ருள்ளனர். நாணயத்தின் மற்றுமொரு பக்கத்தில் நூறு ரூபாய் குறியீடும், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் எழுதப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட இந்த நாணயம் வெள்ளி, செம்பு, துத்தநாகம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளாதாக மத்திய அரசு தகவலில் தெரியவந்துள்ளது.