வரும் 13ந்தேதி பிரேசில் பயணமாகிறார் பிரதமர் மோடி!

டெல்லி:

பிரதமர் மோடி,  11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசில் செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாடு வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசிலில் நடைபெறுகிறது. புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். இதில் கலந்துகொள்ளும் வகையில் பிரதமர் மோடி வரும் 13ந்தேதி பிரேசில் பயணமாகிறார்.

உறுப்பு நாடுகளுடன் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த உச்சி மாநாட்டில் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று  வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார உறவுகள்) டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.