பாஜக நிர்வாகி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பிரதமர் மோடி! .

பாஜக நிர்வாகி ஒருவரின் கேள்விக்கு பதலளிக்க முடியாமல் பிரதமர் மோடி திணறிய வீடியோ வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தயாராகி வருகிறது.  இதையடுத்து   நாடு முழுதுமுள்ள பாஜக நிர்வாகிகளிடம் மாநிலம் வாரியாக பிரதமர் மோடி வீடிோய கான்பிரன்ஸில் பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக  புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினர். பாஜக நிர்வாகிகள் மட்டுமே இந்த கான்பிரன்சில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  இக்கூட்டத்தில், நிர்மல் குமார் ஜெயின் என்பவர் இந்தியில் முதலில் பிரமதர் மோடியிடம் பேசினார்.

அப்போது அவர், “நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை மட்டுமே வசூல் செய்கிறீர்கள். வரியை வசூலிப்பதில் காட்டும் அக்கறையை  நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதியாக இருக்கச் செய்யும்  நடவடிக்கை எடுப்பதிலும் காட்டுங்கள்” என்று தெரிவித்தார்.

 

நிர்மல் குமாரின் கேள்வியால் அதிர்ந்துபோன பிரதமர் மோடி,  பதிலளிக்க முடியாமல்  வணக்கம் புதுச்சேரி என்று  கூறிவிட்டு விழுப்புரம் நிர்வாகிகளுடன் கலந்துரையாட சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வு முடிந்ததும் மோடியிடம் கேள்வி எழுப்பிய நிர்மல் குமாரை பாஜகவினர் தேடினர் ஆனால்  அதற்குள் அவர், அங்கிருந்து சென்றுவிட்டார்.

பாஜக நிர்வாகியே பிரதமர் மோடியிடம் அதிரடியாக கேள்வி எழுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.