கேதர்நாத் கோவிலில் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் தீபாவளியை கொண்டாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தீபாவளி பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத்தில் கொண்டாட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதர்நாத் கோயிலில் இரண்டு மணி நேரம் பிரதமர் மோடி வழிபாடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

diwali

முன்னதாக, கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்ற மோடி 2015-ம் ஆண்டில் அமிர்தசரில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார். 2016ம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேசத்திலும், கடந்த 2017ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடனும் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

இந்நிலையில், 2013ம் ஆண்டு புயலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வரும் கேதார்நாத்தில் பிரதமர் மோடி நடப்பாண்டின் தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளார். பிரதமர் மோடி தனது கேதார்நாத் பயணத்தின் போது, அங்கு நடைபெற்று வரும் மறு கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.