டில்லி,

71வது பிறந்தநாளை கொண்டாடும் அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அகில இந்தியா காங்கிரஸ் தலைவராக இருக்கும் சோனியாகாந்தியின் 70வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்க உள்பட எதிர்க்கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், சோனியா நல்ல உடல்நலத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார்.