மோடி தலைமையில் 2019 தேர்தலை சந்திக்க திட்டம்! என்.டி.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

டில்லி,

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் சந்திக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிpa;y (என்டிஏ)  தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை டில்லியில்  என்டிஏ எம்.பி.க்கள் கூட்டம்  நடைபெற்றது.

இந்தாண்டு ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மற்றும் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா, லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடக்கி ஜனநாயகத்துக்கு எதிராக  செயல்பட்ட காங்கிரஸ் கட்சி குறித்து  நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அருண்ஜேட்லி, மோடி தலைமையில் நாடு முழுவதும் ‘சுத்தமான மற்றும் ஊழலற்ற ஆட்சி “(clean and corruption-free governance” ) அமைக்க பாடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, இந்தியாவின் வளர்ச்சி இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தில் 2019-ம் ஆண்டு லோக்சபாதேர்தலை மோடி தலைமையில் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

என்டிஏ கூட்டம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கியது. கூட்டம் முடிந்ததை தொடர்ந்து விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சியை சேர்ந்த  காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.