தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சீன உணவு வகைகளுடன், தென்னிந்திய உணவு வகைகளும் பறிமாறப்படுவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா சந்திப்புக்காக சென்னை வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் அர்ச்சுனன் தவசு, பஞ்ச ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகிய 3 இடங்களைப் பார்வையிட்டார். பின்னர், கலாஷேத்ரா சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியை கண்டுகளித்த அவர், கடற்கரை கோயில் கலை நிகழ்ச்சிகள் ராமாயண காட்சி வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்ததை ரசித்து பார்த்தார். நிகழ்ச்சிகள் முடிவுற்ற பின்னர் கிண்டி ஐ.டி.சி சோழா நட்சத்திர விடுதிக்கு ஓய்வு எடுப்பதற்காக சீன அதிபர் புறப்பட்டுச் சென்றார்.

சீன அதிபருக்கு சீன உணவு வகைகளுடன், மலபார் இரால் கறி, சிக்கன், மட்டன், கருவேப்பிளை மீன் வறுவல், தஞ்சாவூர் கோழி கறி, இறைச்சி கெட்டி குழம்பு, செட்டிநாடு அரைத்துவிட்ட குழம்பு, சுண்டைக்காய் குழம்பு, பிரியாணி, அடை பாயாசம், அல்வா, முக்கணி ஐஸ்கிரீம் உட்பட தென்னிந்திய உணவு வைகைகளும் பறிமாறப்படுகின்றன.