மும்பை

திர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஊரடங்கு குறித்துச் சொல்வதை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது.

கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது நான்காம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராதது மட்டுமின்றி தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.    இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்தும் அதை மத்திய பாஜக அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத், “பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவருக்கும் அதாவது எதிர்க்கட்சியினருக்கும் பிரதமர் ஆவார்.   ஆகவே எதிர்க்கட்சியினர் ஏதாவது சொல்லும் போது அதை பிரதமர் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஊரடங்கு பற்றித் தெளிவாகக் கூறி வருகிறார்,  இதைப் பிரதமர் மோடி அவசியம் கேட்க வேண்டும்.

அனைத்து எதிர்க்கட்சியினரும் இணைந்து ஒன்றைச் சொன்னால் அதில் ஏதோ விஷயம் உள்ளது என்பதை பாஜக அரசு உணர வேண்டும். இதை நான் சாம்னா பத்திரிகையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த நேரத்தில் நாம் நமது சொந்த விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.  நாடு தற்போது மோசமான சுழலில் சென்றுக் கொண்டு இருக்கிறது.   எனவே இன்னும் இரு வருடங்களுக்காவது நமது அரசியல் வேறுபாடுகளை மறந்து கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.