கொரோனா பரவல், விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல், விவசாயிகள் அதிரடி போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் இப்போது நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளன. இந் நிலையில் வரும் 4ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்டமானது பிரதமர் மோடியின் தலைமையில் டிசம்பர் 4ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்,நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.