குஜராத் : உலகின் மிக உயரமான சிலையான படேல் சிலை நாளை திறப்பு

சாது பெட் தீவு, குஜராத்

லகின் மிக உயரமான சிலையான படேல் சிலையை நாளை பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் திறந்து வைக்கிறார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சர்தார் வல்லப் பாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படுபவர்.    சுதந்திரம் அடைந்த போது பல சாம்ராஜ்யங்களாக பிரிந்திருந்த இந்தியாவை ஒருங்கிணைத்தவர் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.     நாளை (அக்டோபர் 31 ஆம் தேதி)  சர்தார் படேலின் பிறந்த தினம் ஆகும்.

அவர் பிறந்த தினத்தன்று அவருடைய பிரம்மாண்ட உருவச் சிலை திறக்கப்பட உள்ளது.   உலகின் மிக உயரமான இந்த சிலையின் உயரம் 183 மீட்டர் ஆகும்.  இதுவரை உலகின் மிக உயரமான சிலை என கூறப்பட்ட அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையின் உயரம் 92 மீட்டர் ஆகும்.  படேல் சிலை அதைப்போல் இரு மடங்கு உயரம் உள்ளதாகும்.

இந்த சிலை நர்மதா மாவட்டத்தில் உள்ள சாது பெட் தீவில் அமைக்கபட்டுள்ளது.   கடந்த  மூன்றரை வருடங்களாக அமைக்கப்பட்டு வந்த இந்த சிலையை சுமார் 3000 பணியாளர்கள் சேர்ந்து செய்துள்ளனர்.   அதில் 300 பொறியாளர்களும் அடங்குவார்கள் .   புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமாக லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது.

நாளை காலை 11.30 மணிக்கு இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.  ஒற்றுமையின் சிலை என பிரதமரால் அழைக்கப்படும் இந்த சிலையைக் டிக்கட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகின்றன.   வரும் நவம்பர் 3 முதல் இந்த சிலையை பொதுமக்கள் பார்வை இட  முடியும்.  இந்த டிக்கட் விலை பெரியவர்களுக்கு ரூ.120 ஆகவும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ. 60 ஆகவும் இருக்கும்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.    இந்த வளாகத்தினுள் செல்லும் பேருந்துக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30 எனவும் சிறியவர்களுக்கு ரூ.1 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   இந்த டிக்கட்டுகளை தனியாக பெற வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published.