பண பேர விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி பாமக வழக்கு!

சென்னை,

டப்பாடி தலைமையிலான அரசின் பெரும்பான்மை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, பண பேரம் தொடர்பான விடியோ டைம்ஸ்நவ் ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க  எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  ஏற்கனவே திமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

ஆனால், இது சட்டப்பேரவை சம்பந்தப்பட்டது, இதுகுறித்து கோர்ட்டு விசாரிக்க கூடாது என தமிழக முதல்வரும், சட்டசபை செயலாளரும் பதில் மனுவில் கூறியதை தொடர்ந்து திமுகவின் சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தற்போது எம்எல்ஏக்கள் பண பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாமக வழக்கு தொடர்ந்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமகவை சேர்ந்த ஜிகே மணி வழக்கு தொடர்ந்துள்ளார்.