தர்மபுரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக – கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாமக அறிவித்திருந்தது.

போராட்டத்தையொட்டி மதுராந்தம் மற்றும் சுற்றுப்புற வட்டாரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.  வந்தவாசியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன.  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கலில் கரூர் – சேலம் பயணிகள் ரயிலை மறித்து பாமகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் நான்கு அரசுப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீதித் தாக்கினர். இதனால் கர்நாடக – தமிழக எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக

கர்நாடகா மாநிலத்தில் இருந்து பேருந்துகள்  கர்நாடகா எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கர்நாடக எல்லையில் இருந்து தமிழக எல்லைக்கு மாறி வந்து பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.