முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் விருந்து 

திண்டிவனம்:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் விருந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

அ.தி.மு.கவுடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது பாமக. இதனையடுத்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நி​ர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

இந்த விருந்தின்போது, தேர்தல் வியூகம் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: They were greeted with garland, துணை முதல்வர், முதல்வர், ராம்தாஸ், விருந்து
-=-