திண்டிவனத்தில் தொடங்கியது பா.ம.க. பொதுக்குழு!

திண்டிவனம்:

பாமகவின் பொதுக்குழு, கட்சி தலைவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை தொடங்கியது.

பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்,  2016-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2017-ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை தொடங்கியது.

பொதுக்குழுவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கி வரவேற்றார்.

இப்பொதுக்குழுவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நடைபெற்று வரும்,  பொதுக்குழுவில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தற்போதைய  தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பொதுக்குழுவில்  டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

பாமக பொதுக்குழுமாக திண்டிவனம் நகரம் மற்றும் தைலாபுரம் முழுவதுமே  பா.ம.க. கொடி தோரணங்களால் அலங்கரிங்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே  ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

கார்ட்டூன் கேலரி