Random image

பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

கோவை:

பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கோவை சிங்காநல்லூரில்  2 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த ஜி.கே. மணிக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து கோவை  பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இருதயகோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு மருத்துவமனை அளித்த தீவிர சிகிச்சையை தொடர்ந்து தற்போது உடல் நலம்  தேறி வருவதாக வும் கூறப்படுகிறது.

இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்த டிஸ்சார்ஜ் ஆகி பாமக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்றும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.