சென்னை:

டல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக தலைவர் ராமதாசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பாமகத் தலைவர் ராமதாஸ், காய்ச்சல் மற்றும் முதுகுவலிக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.