வன்னிய மக்களின் செல்வாக்கை இழந்த பா.ம.க.!

டந்த  சட்டசபை தேர்தலில் வட தமிழகத்தில் வன்னிய இன மக்கள் கணிசமாக வாழும்  மாவட்டங்களில் அதிக இடங்களில் தி.மு.க.வே வென்றிருக்கிறது.

வட தமிழகத்தைப் பொறுத்தவரை வன்னிய இன மக்களே தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக  இருந்து வருகின்றனர்.  இப்பகுதியில் கடந்த பல தேர்தல்களில் பாமகவுக்குதான் அல்லது அது இருக்கும் கூட்டணிக்குத்தான் வெற்றி கிடைத்து வந்தன.

1996ம் ஆண்டு தேர்தலில், ஜெயலலிதாவுக்கு எதிரான பெரும் அலை வீசிய போது…  தி.மு.க. வுக்கு ஆதரவான அலைவீசியபோதே தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது பா.ம.கட்சி.

ஆனால் இப்போது பா.ம.க.வுக்கு செல்வாக்கு மிக்க தொகுதிகள் என்று சொல்லப்பட்டவைகளில் தி.மு.க.வவே வென்றிருக்கிறது.

ஆம்.. . வட மாவட்டங்களின் 66 தொகுதிகளில் 40 இடங்களில் திமுக வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் 10 தொகுதிகளில் அதிமுக 7 ஐ கைப்பற்றியது. திமுக 3 இடங்களைத்தான் பெற  முடிந்தது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் திமுக 9 இடங்களை அள்ளியது. இங்கு அதிமுகவுக்கு கிடைத்தது 2 இடங்கள்தான்.

வேலூர் மாவட்டத்தின் 13 தொகுதிகளில் அதிமுகவுக்கு 7; திமுக 6 இடங்கள் கிடைத்திருக்கின்றன.  திருவண்ணாமலை மாவட்டத்திலோ 8 தொகுதிகளில் திமுக 5; அதிமுக 3 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் திமுக 7 இடங்களை அள்ளிவிட்டது.  அதிமுகவுக்கு 4 தான் கிடைத்திருக்கிறது.

அது மட்டுமல்ல.. கடந்த  2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ம.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.  அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 0.4 மட்டுமே.  இதனால்  தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்தது அக் கட்சி.

இப்போது தனித்து போட்டியிட்டாவது 6 சத ஓட்டுக்களையும், 2 எம்.எல்.ஏ. சீட்டுக்களையும் பெற்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தே களம் இறங்கியது பா.ம.க.

அன்புமணி, ஜி.கே. மணி, ராமதாஸ், குரு
அன்புமணி, ஜி.கே. மணி, ராமதாஸ், குரு

பொதுவாக, பா.ம.க. மீது, “எந்தவித கொள்கையும் இன்றி மாறி மாறி கூட்டணி வைத்துக்கொள்ளும்” என்கிற விமர்சனம் உண்டு. இந்த முறை அந்த குற்றச்சாட்டை சொல்ல முடியாத படி தனித்து களம் கண்டது.

தவிர, பா.ம.கவில் இருந்து ஒரு முதல்வர் வேட்பாளர்… அதுவும் அன்புமணி ராமதாஸ்.. ஆகவே வன்னிய இன மக்கள் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்த்தது பா.ம.க.

ஆனால் அது நடக்கவில்லை.  5.3 சதவீத வாக்குகளை மட்டுமே பா.ம.க. பெற்றது. முதல்வர் வேட்பாளர் அன்புமணி உட்பட பா.ம.க. வேட்பாளர்கள் ஒருவருக்கு கூட மக்கள் வெற்றியை அளிக்கவில்லை.

ஆக, வன்னிய மக்கள் இனியும் பா.ம.க.வை தாங்கிப்பிடிக்க தயாரில்லை என்பதையே இத் தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published.