காஞ்சிபுரம் : சரவண பவன் ஓட்டலில் கலாட்டா செய்த பா ம க வினர் !

--

காஞ்சிபுரம்

ன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள சரவணபவன் ஓட்டலில் பா ம க வினர் நுழைந்து கண்ணாடிகளை உடைத்து, கலாட்டா செய்ததால் சாப்பிட வந்தவர்கள் பயந்து போய் தலை தெறிக்க ஓடினர்.

காஞ்சிபுரத்தில் சரவண பவன் ஓட்டலின் கிளை  ஒன்று உள்ளது.  அந்தக் கிளையில் உள்ள கழிவறையை உள்ளூர் நபர் ஒருவர் தினமும்  உபயோகித்து வந்துள்ளார்.  இதனை ஊழியர்கள் பலமுறை தடுத்தும் அவர் கேட்காமல் மீண்டும் மீண்டும் உபயோகித்து வந்தார்.  இன்று அவரைப் பிடித்த ஓட்டல் பணியாளர்கள் கண்டித்து உள்ளனர்.  பயங்கரமான வாய்த்தகராறு காரணமாக அந்த நபர் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த நபர் உள்ளூர் பா ம க வை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மேனேஜரிடம் தகராறில் ஈடுபட்டார்.  தகராறு வலுக்கவே பா ம க வினர் கேஷ் கவுண்டர், இனிப்பு வைத்திருந்த கண்ணாடி அலமாரி ஆகியவற்றை நாற்காலியை வீசி உடைத்து எறிந்தனர்.  ஓட்டல் முழுவதும் கண்ணாடித் தூள்கள் சிதறியதைக் கண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் பயந்தனர்.  தங்களின் உயிரைக் காக்க தலை தெறிக்க வெளியே ஓடினார்கள்.  பிறகு போலீஸ் வந்து நிலமையை சீர் செய்தது.  இது பற்றி போலீச் மேலும் விசாரிப்பதாக தெரிய வருகிறது.