Random image

நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு

சென்னை

காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நாளிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக தனது ஆதரவை அளித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து நாளை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.   இந்த அடைப்புக்கு நாடெங்கும் உள்ள பல எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.   அதனால் இந்த அடைப்பு முழு வெற்றி அடையும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த முழு அடைப்புக்கு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.   அதிமுக தனது ஆதரவை அளிக்கவில்லை.  இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இந்த அடைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜி கே மணி, “பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.   இது மக்களின் பிரச்னை என்பதால் பாட்டாளி மக்கள் கட்சி இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தனது ஆதர்வை அளிக்க உட்தேசித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.