டில்லி:

சிறுமிகள் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யுமாறு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியன் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூடுதல் தண்டனையாக இந்த குற்றவாளிகளுக்கு ரசாயன ஆன்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று மகளிர் வக்கீல்கள் சங்கம் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.

இதன் அடிப்படையில் சிறுமி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ரசாயன ஆன்மை நீக்கம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.