ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

டில்லி

த்திய அமைச்சர்களில் ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்கள் பெயர் பட்டியலை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறப்படு வருகிறது. சமீபத்தில் சிபிஐ அதிகாரி மணிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் மீது லஞ்சக் குற்றம் கூறப்பட்டுள்ளது. இதைப்போல் ஏற்கனவே பல அமைச்சர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஊழல் புகார்களில் சிக்கி உள்ள அமைச்சர்கள் பெயர் பட்டியலை கேட்டு இந்திய வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் தகவலறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவை தகவல் அணையம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளது.

இதற்கு பிரதமர் அலுவலகம், “மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் சார்ந்த மற்றும் சாராத என இரு பிரிவுகளில் புகர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் பல புகார்கள் கற்பனையானவை ஆகும். அத்துடன் சரியான அடையாளம் இல்லாமல் வந்த புகார்களும் உள்ளன. இத்தகைய புகார்களின் உண்மாஇ தன்மை குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

மத்திய அமைச்சர்களில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் பெயர் பட்டியலை மட்டுமே மனுதாரர் கேட்டுள்ளார். இவ்வாறான புகர்கள் பல்வேறு துறைகளில் பல்வேறு கோப்புக்களில் பதிவாகி உள்ளன. எனவே அவற்றை தேடுவது கடினம். இதனால் ஊழியர்களின் அன்றடப் பணிகள் பாதிக்கும். ஆகவே இது குறித்த விவரங்களை தர இயலாத நிலையில் இந்த அலுவலகம் உள்ளது” என பதில் அளித்துள்ளது.