முன்னேறும் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து : பிரதமர் அலுவலகம் தலையீடா?

டில்லி

முன்னேறும் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவதில் பிரதமர் அலுவலக தலையீடு உள்ளதாக முன்னாள் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஜியோ இன்ஸ்டிட்யூட்  உள்ளிட்ட 3 தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் 3 அரசு பல்கலக்கழகங்களுக்கும் முன்னேறும் சிறந்த பல்கலைக்கழகம் என்னும் அந்தஸ்து அளிக்கப்பட்டது.   இது நாட்டில் கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.    இந்நிலையில் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு சில முன்னாள் அரசு அதிகாரிகள் ஒரு சில தகவல்களை தெரிவித்துள்ளனர்

 

முன்னாள் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது :

கடந்த 2017 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பலகலைக்கழக மானிய வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.  அதில் முன்னேறும் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்கான விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.   இந்த விருது பெறும் பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்தில் உயர நிதி உதவியை தடை இன்றி பெறலாம் என்பதும் அந்த விதிமுறைகளில் ஒன்றாகும்.  அத்துடன் இந்த பல்கலைக் கழகங்கள் பல புதிய பாடத் திட்டங்களையும் தொடங்க அரசு உடனடியாக அங்கீகரிக்கும் என்பதும் மற்றொரு விதி முறை ஆகும்.

இந்த வருடம் ஜூலை மாதம் மூன்று அரசு மற்றும் மூன்று தனியார் பல்கலைக்கழகத்துக்கு அந்தஸ்து பெற்றுள்ளதாக வாரியம் அறிவித்தது.   அதில் புகழ்பெற்ற ரிலைய்ன்ஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ இன்ஸ்டிடியுட் என்னும் தொடங்கபடாத பல்கலைக் கழகத்தின் பெயரும் இருந்தது.   இது முழுக்க முழுக்க பிரதமர் அலுவலகத்தின் தலையிட்டின்  பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிப்பதற்கு முன்பு நடந்த கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத் துறையின் அதிகாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஆயினும் அந்த எதிர்ப்புகளை பிரதமர் அலுவலகம் அலட்சியம் செய்துள்ளது.  அத்துடன் இது மக்களின் நன்மைக்காவும் கல்வி மேம்பாட்டுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.

இந்த தகவலை ஆங்கில நாளேடான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் ’ஸ்க்ரோல்.இன்’ இணைய தளமும் வெளியிட்டுள்ளது