டில்லி:

பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியதை பிரதமர் அலுவலகம் சார்பில் இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டு பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ஏழைகளுக்கு தரமான மற்றும் மலிவான சுகாதார வசதிகளை வழங்குவதில் ஒன்றாக இணைவோம்” என பிரதமர் இந்தியில் பேசினார்.

இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது ‘கமா’ போன்று நிறுத்துதலுக்கான குறிகளை போடாமல் விட்டுவிட்டனர். இதனால், அதன் அர்த்தம் தலைகீழாக மாறிவிட்டது.

ஆம், “தரம் குறைந்த மற்றும் மலிவான சுகாதார வசதிகளை வழங்குவதில் ஒன்றாக இணைவோம்” என்று மொழி பெயர்பாகிவிட்டது. இது அப்படியே டுவிட்டரில் பதிவாகிவிட்டதால் சமூக வலை தளங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிவிட்டது.

ஏற்கனவே பக்கோடா பிரச்னை சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் சமயத்தில் இதுவும் சேர்ந்து கொண்டது.