வெங்காய வியாபாரியின் ரூ.1064ஐ திருப்பிய அனுப்பிய பிரதமர் அலுவலகம்! காரணம் தெரியுமா?

டில்லி:

டநாட்டில் விளைந்து விற்பனைக்கு வந்துள்ள வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால், அதை பயிரிட்டு வரும் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக பலர் தற்கொலை முடிவையும் நாடி உள்ளனர்.

இந்த சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த வாரம் சஞ்சய் சாதே என்ற விவசாயி தனது நிலத்தில் 4 மாதமாக கஷ்டப்பட்டு விளைவித்த  வெங்காயத்துக்கு உரிய கிடைக்காததால், விவசாயிகளின் பரிதாபமான நிலை மோடி அரசுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில், அவரிடம் இருந்து 750 கிலோ வெங்காயம் அனைத்தையும் விற்பனை செய்து அதில் கிடைத்த ரூ.1,064 ஐ பிரதமர் பிரதமர் நிவாரண நிதிக்கு மணி ஆர்டர் மூலம் அனுப்பினார்.

இதன் மூலமாவது தங்களைப்போன்ற விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்குமா, பிரதமர் விவசாயிகள் குறித்து எண்ணிப்பார்ப்பாரா என்று கருதியே, அவர் அந்த பணத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார்.

ஆனால், பிரதமர் அலுவலகமோ, அந்த பணத்தை சஞ்சய் சாதேவுக்கே திருப்பி அனுப்பி உள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கான பணத்தை, ரொக்கமாக ஏற்க மாட்டோம், அதை நீங்கள் வங்கிகள் வாயிலாக செலுத்துங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளது.

இதனால் மேலும் மனம் நொந்துபோன சஞ்சய் சாதே. விவசாயிகளின் சோகம் எப்போதுதான் பிரதமரின் காதில் கேட்கும் என்று கூறி உள்ளார்.

காராஷ்டிராவில் உள்ள வெங்காய விசசாயி  சஞ்சய் சாதே என்ற விவசாயி  கஷ்டப்பட்டு பயிரிட்டு பாதுகாத்து விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காயம், போதிய விலையின்றி, கிலோ 1 ரூபாய் 41 பைசாவுக்கு விற்பனை ஆனதால், தன்னிடம் இருந்து 750 கிலோ வெங்காயத்தை, வெறும் ரூ.1064க்கு விற்பனை செய்தார்,

தங்களது பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக இந்த சொற்ப பணத்தை கொண்டு, மீண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலையிலும், விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை எப்படி அடைப்பது என்று யோசித்த நிலையில், இந்த பணத்தை பிரதமருக்கு அனுப்பினாலாவது தங்களது கஷ்டகாலம் நீங்கும் என்று நினைத்து பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்தார்.

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவதை மத்திய-மாநில அரசுகளுக்கு உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்த விவசாயி, உடனே அந்த பணத்தை மணியார்டர் மூலமாக பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் பிரதமர் அலுவலகமே பணத்தை வங்கிகள் மூலம் அனுப்பி வையுங்கள் என்று கூறி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் முதுகெலுப்பான விவசாயிகளை  கொன்று வருவதற்கு இது மேலும் ஒரு சான்று.