மோடியின் உடற்பயிற்சி வீடியோ எடுக்க ரூ. 35 லட்சம் செலவு

டில்லி

மோடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ எடுக்க பிரதமர் அலுவலகம் ரூ.35 லட்சம் செலவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் தந்துள்ளது.

கடந்த மாதம் பிரதமர் மோடி விதம் விதமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உலகமெங்கும் வைரல் ஆகியது.   அத்துடன் அனிமேஷன் முறையில் மோடி யோகா செய்யும் வீடியோவும் வெளியாகியது.   இது குறித்து பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்வில் இந்த யோகா வீடியோ எடுத்த நிறுவனத்தை பெரிதும் பாராட்டி உள்ளனர்.

அதே நேரத்தில் அவர் இதற்கான செலவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.   இந்நிலையில் ஆங்கில ஊடகமான இந்தியாஸ்கூப்ஸ்.காம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.   அதன் படி பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒருவர் இந்த வீடியோ எடுக்க பிரதமர் அலுவலகம் ரூ. 35 லட்சம் செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை அவர் தனது குடும்ப நண்பர்களுடன் பேசிய போது தற்செயலாக வெளியிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.   மேலும் இது மோடி உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்டதற்கான வீடியோவுக்கான செலவு மட்டுமே என்றும் அந்த அனிமேஷன் வீடியோவுக்கான செலவு எவ்வளவு என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.