டில்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

முந்தைய பிரதமர் மன்மோகன்சிங்கைவிட தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அதிகமான வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நுடன் தாக்கூர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு விபரம் குறித்த தகவல்களை கோரினார்.

மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் பல மத்திய அரசு அலுவலகங்கள் இடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் குறிப்புகள் ஆவணங்கள் குறித்த விவரங்களையும் கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியிருந்தார்

குறிப்பிட்ட இந்த மனு பெரிதாகவும், தேவையற்ற கேள்விகளை கொண்டுள்ளதாகவும் இருப்பதாக கூறி பிரதமர் அலுவலகம், மனுவை நிராகரித்தது.

தற்போது பிரதமர் அலுவலகத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தாக்கூர் தெரிவித்துள்ளார்.