கடனை திருப்பி செலுத்தாத 150 பேரின் பாஸ்போர்ட் பறிமுதல்…..பிஎன்பி நடவடிக்கை

மும்பை:

கடனை திருப்பி செலுத்தாத 150 நபர்களின் பாஸ்போர்ட்களை பஞ்சாப் நேஷனல் வங்கி பறிமுதல் செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதார். இதை தொடர்ந்து ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்களின் பாஸ்போர்ட் விபரங்களை கேட்டு பெறுமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியது.

இதை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்யும் வகையில் அதை திருப்பி செலுத்தாமல் இருக்கும் 150 நபர்களின் பாஸ்போர்டகளை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது. கடந்த 9 மாதங்களில் கடனை திருப்பி செலுத்தாத 37 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள இந்த வங்கியின் கிளையில் ஆயிரத்து 84 பேர் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இவர்களில் 260 பேரது விபரங்கள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.