டில்லி

நாடெங்கும் நகை செய்வோரிடம் கடன் கொடுத்ததில் பாரத ஸ்டேட் வங்கியை விட நான்கு மடங்கு பஞ்சாப் நேஷனல் வங்கி இழந்துள்ளது.

நகை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை ரூ.5000 கோடி கடன் கொடுக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது.   கடன் வாங்கியவர்களில் மொத்தம் 90 பேர் கடனை திருப்பிச் செலுத்தவில்லை   இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1700 கோடி அளவுக்கு திருப்பித் தராமல் உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் இழந்ததைப் போல் நான்கு மடங்கு பணம் பஞ்சாப் நேஷனல் வங்கி இழந்துள்ளது.   சமீபத்தில் நடைபெற்ற நிரவ் மோடி ஊழலைத் தொடர்ந்து எடுக்கப்பட கணக்கெடுப்பில் இந்த தகவல் கிடைத்துள்ளது.   பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 410 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ. 309 கோடியும் ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸில் ரூ.243 கோடியும் மற்ற 26 வங்கிகளும் இணைந்து ரூ. 2248 கோடியும் இதுவரை திருப்பித் தராத நகை வர்த்தகக் கடனாக உள்ளது.

இதில் பாரத ஸ்டேட் வங்கியில் 15 பேர்களும்,  பஞ்சாப் நேஷனல் வங்கி, மற்றும் யுனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் தலா ஒன்பது பேரும் கடனை திருப்பி செலுத்தவில்லை.   இது தவிர ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்சில் 8 பேரும் மீதமுள்ள 26 வங்கிகளிலும் சேர்ந்து 49 பேர்களும் கடன் திருப்பி செலுத்தாதோர் பட்டியலில் உள்ளனர்.