டில்லி

குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கும் போக்சோ சட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த குற்றத்துக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இந்த சட்டம் திருத்தப்பட்டது.  இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த மசோதாவை நேற்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.  இந்த சட்டத் திருத்த மசோதாவில் குழந்தைகளை பலாத்கரம் செய்வோருக்கு அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த  மசோதாவில், “16 வயதுக்கு குறைவன குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் மரண தண்டனை அளிக்கப்படும்.  இந்த சிறைத் தண்டனை ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனையாக மாற்றப்படவும் உள்ளது.  அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் மற்றும் புகைப்படம் எடுப்போருக்கு முதல் முறை ஐந்து வருடச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.  இரண்டாம் முறையில் இருந்து இத்தகைய குற்றங்களுக்கு ஏழு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்” என உள்ளது.