கவிதை: கருணை

--
download (3)

கண்ணாடி டம்ளரில் விழுந்த ஈயை
உடனடியாக
ஆள்காட்டி விரலேற்றி
மேசை மேல் இறக்கிவிடும்
உங்கள் கருணையால்
அந்த

தூரிகையானது
மேசை
காகிதமானது
துளி தேநீர்
வண்ணமானது
சிற்றோவியம்
உருவானது

வண்ணத்தைக் கீழே கொட்டிவிட்டு
கடைப்பையனை
நீங்கள் திட்டத்தொடங்கியதும்
உங்கள் கருணையைத் தூக்கிக்கொண்டு
தூரிகை
பறந்து போனது
சிற்றோவியம்
உலர்ந்து போனது

( நாணல்- கலை இலக்கியப் பெருமன்றம் முகநூல் பக்கத்தில் இருந்து..)