குஜராத்:
ளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும்  மொபைல் விளையாட்டு போகிமான். இதில் விளையாடப்படும் முட்டை பற்றிய வழக்கு குஜராத் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதள செல்போன்களில் இயங்கும் வகையில் ‘போகிமான் கோ’ என்ற விளையாட்டு வெளியாகி, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விளையாட்டை ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் கூடிய இணையதளம் மற்றும் கேமரா இணைந்த செல்போன்களில் தான் விளையாட முடியும்.
ஜுன் மாதம் வெளியான போகிமான் கோ கேம் தற்போது மேலும் வசதிகளுடன்  அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை, போகிமான் கோ கேம்  நிறுவனமான நியான்டிக் அறிவித்துள்ளது. இந்தப் புதிய அப்டேட், Buddy போகிமான் என்ற பெயரில் போகிமான் கோ கேமில் சேர்க்கப்பட்டிருக்கும். இதில் சென்று புரொஃபைலில் நமது புகைப்படத்தைப் பதிவேற்றினால் போகிமான் கோ கேமில் நாமும் போகிமானுடன் சேர்ந்து விளையாடலாம்.
1apokna2
தங்கள் முகத்தையே போகிமானுடன் இணைத்து திரையில் பார்க்கலாம் என்பதால், இந்த அப்டேட்டிற்கு இளைஞர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இதன்மூலம், விளையாடுபவர்கள் கேமில் போகிமானுடன் இணைந்து நிறைய மிட்டாய்களைச் சேமிக்கலாம். இது, புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாகக் கூறுகிறது.
இந்த விளையாட்டு குறித்து நல்லது சொல்பவர்களும் இருக்கிறார்கள், இதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுவதாக கூறுபவர்களும் உள்ளனர்.

வெளியான சில நாட்களிலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டு என்ற சாதனையை போகிமான் கோ படைத்தது. தினமும் 21 மில்லியன் அமெரிக்க மக்கள் இதை விளையாடுகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது.

போகிமான் விளையாடும் சக போகிமான் ட்ரெய்னர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் போகிமான்களுக்குள் சண்டை போட்டு விளையாடும் அம்சமும் இதில் உள்ளதால், இதை ஒட்டி புது நண்பர் சந்திப்புகளை (Pokmon go Dates)அமெரிக்கர்கள் பலர் ஆரம்பித்துள்ளனர். மக்களோடு மக்களாக இணைந்து நேரம் செலவழிக்க முடிவதாக சிலர் கருதுகின்றனர்.

1pokman

இதுநாள் வரை உடற்பயிற்சி செய்யாத நாங்கள் போகிமான் கோ-வால் விளையாட்டாக 8-9 கிலோமீட்டர்கள் நடந்து விட்டோம் என பலர் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

வெளியான சில நாட்களிலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டு என்ற சாதனையை போகிமான் கோ படைத்ததுள்ளது. தினமும் 21 மில்லியன் அமெரிக்க மக்கள் இதை விளையாடுகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது.
இந்த போகிமான் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு குஜராத் ஐகோர்ட்டில் ஒரு பொது நலவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் அலாய் தேவே என்பவர், “இந்த விளையாட்டில் பல்வேறு மதத்தினரின் வழிபாட்டு தலங்களில் முட்டைகள் இருப்பதாக காட்டப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
1a-bpokna2
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் வி.எம். பாஞ்சோலி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்குதாரர் சார்பில் வக்கீல் நாச்சிகெட் தவே ஆஜராகி வாதாடினார்.
“இந்த போகிமான் விளையாட்டை விளையாடுகிறவர்கள், பல்வேறு மதத்தினரின் கோவில்களில் காணப்படுகிற முட்டையின் வடிவத்தில் புள்ளிகளை பெறுகிறார்கள். முட்டை அசைவ உணவாகும். அப்படிப்பட்ட ஒன்றை இந்துக்கள், சமணர்கள் வழிபடும் இடங்களில் இருப்பதாக காட்டுவது இழிவான செயல்” என வாதாடினார்.
அதைத் தொடர்ந்து, ‘போகிமான்’ விளையாட்டை உருவாக்கியுள்ள அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள நியான்டிக் இன்க் நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அவற்றின் பதிலைப் பொறுத்து, ‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.