‘மாஸ்டர்’ படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ வெளியீடு…..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அந்த கண்ண பார்த்தாக்கா பாடலோடு ஒரு ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது,இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

https://twitter.com/XBFilmCreators/status/1348245725742649349