பிரெஞ்சு ஓபன் – மகளிர் ஒற்றையரில் இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன்!

--

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை ஏந்தினார் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக்.

இந்த போலந்து வீராங்கனை உலகத் தரவரிசையில் 54வது இடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், நம்பர்-6 நிலையிலிருந்த கெனினை வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் சாம்பியனாகியுள்ளார். இவருக்கு வயது 19.

இறுதிப் போட்டியின் முதல் செட்டை 6-4 என்று வென்றவர், இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி, போட்டியை வென்று சாம்பியன் கோப்பையை ஏந்தினார்.

இது, இகா பெறுகின்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மேலும், ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெறுகிறார் இகா.