காவல்துறை அத்துமீறல்! 28ந்தேதி மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம்!

சென்னை,

காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து வரும்  28ந்தேதி மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னை மற்றும் தமிழகமெங்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை யினிர் வலுக்கட்டாயமாக வெளியேற்றனர். இதன் காரணமாக சென்னையில் பலத்த கலவரம் ஏற்பட்டது.

சென்னை காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து வரும் 28ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் நலக்கூட்டணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும்,

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும்,

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  சென்னையில் நேற்று நடைபெற்ற கலவரம் குறித்தும்,  போலீசாரின் அத்துமீறல் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் மநகூ சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

You may have missed