போலீஸ் அத்துமீறல் காட்சிகளை சைபர் கிரைம் ஆய்வு: ஜார்ஜ் தகவல்

சென்னை:

போலீஸ் அத்துமீறல் காட்சிகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 170 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வன்முறை தொடர்பாக சமூக வலை தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். டிவி.க்களில் வெளியான காட்சி பதிவுகள் மூலம் வன்முறையில் ஈடுபடுட்டோர் அடையாளம் காணப்படும் பணி நடந்து வருகிறது. சென்னையில் இயல்பு நிலை திரும்பி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சீரானது.

சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளியான காட்சிப் பதிவுகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.