பைனான்சியர் அன்பு வெளிநாடு தப்ப திட்டம்? விமான நிலையங்கள் உஷார்

சென்னை,

சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் அன்புசெழியன் வெளிநாடு தப்பிவிட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடாதவாறு போலீசார், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல்கள் தெரிவித்து உஷார்படுத்தி உள்ளனர்.

சுப்ரணியபுரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும், இயக்குநர் சசிகுமாரின் மைத்துனருமான அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, சினிமா பைனான்சியர்  மதுரை அன்புசெழியன் மீது இபிகோ 306 பிரிவின் கீழ் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அன்புசெழியன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் அன்புசெழியன் சிங்கப்பூர் தப்பி ஓட முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்து, அன்பு செழியின் வெளிநாடு தப்பிவிடாதபடி உஷார்படுத்தி உள்ளனர்.

அன்புசெழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.